கொஞ்சம் சிரிங்க பாஸ்.!

ஆசிரியர் : நான் அப்பவே 7 கிலோமீட்டர் நடந்துசென்று படித்து வந்தேன்.
மாணவன் : அப்படின்னா? அப்பவே உங்களுக்கும், படிப்புக்கும் தூரமா சார்……
ஆசிரியர் : ??

நீதிபதி : ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்..
குற்றவாளி : ஒரு பீட்ஸா, இரண்டு தோசை, 3 இட்லி, ஒரு கூல்டிரிங்ஸ்.
நீதிபதி : ஷட் அப்.
குற்றவாளி : இல்லை… இல்லை… செவன் அப்.
நீதிபதி : ??

சேல்ஸ்மேன் : சார்… எறும்புக்கு பவுடர் வாங்கிட்டு போங்க.
ராஜு : வேண்டாம்பா… அது நாளைக்கு லிப்ஸ்டிக் கேக்கும்.
சேல்ஸ்மேன் : ??

டீச்சர் : முகலாய அரசர்கள் எப்போதிருந்து எப்போது வரை ஆட்சி செய்தார்கள்.
மணி : முழுசா எனக்கு தெரியாது டீச்சர்.
டீச்சர் : பரவாயில்லை தெரிஞ்சவரைக்கும் சொல்லு.
மணி : பேஜ் நம்பர் 7 முதல் 13 வரை.
டீச்சர் : ??

நோயாளி : கண்டிப்பா தினமும் பச்சை முட்டை சாப்பிடணுமா? என்னால முடியாது டாக்டர்.
டாக்டர் : ஏன் முடியாது?
நோயாளி : ஏன்னா… எங்க கோழி வெள்ளை முட்டைதான் போடும்.
டாக்டர் : ??

சுந்தர் : ஏயா.. சுடுகாட்டுக்கு பக்கத்துல வீடு கட்டியிருக்க? பேய் நடமாட்டம் இருக்குமே!!
வடிவேலு : என் பொண்டாட்டி இருக்கும்போது பேயாவது, பிசாசாவது தைரியமா வருமா?
சுந்தர் : ??

கஸ்டமர் : ஏன் அவருக்கு லோன் சேங்க்ஷன் ஆகல?
பேங்க் மேனேஜர் : மொட்டை மாடியில கிணறு வெட்டப் போறாராம்!
கஸ்டமர் : ??

மனைவி : என்னங்க போயும் போயும் இந்த டாக்டர் கிட்டயா நான் கண் செக் பண்ணிக்கணும்?
கணவன் : ஏன்? என்ன ஆச்சு?
மனைவி : பாருங்க அவருக்கே பார்வை நேரம் ஆறு டூ ஒன்பது-னு, மூணு மணிநேரம்தான் போட்டிருக்கு!?
கணவன் : ??

மாமியார் : இந்தாங்க மாப்பிள்ளை நீங்க கேட்ட மோதிரம்!
மருமகன் : இதை வாங்கி தந்ததுக்கு நீங்க ஸ்கூட்டரே வாங்கி தந்திருக்கலாம்!
மாமியார் : வாங்கியிருக்கலாம்தான்! ஆனா கவரிங் ஸ்கூட்டர் எங்கே கிடைக்குது?
மருமகன் : ??