ஆசை காட்டி முதியவரை ஏமாற்றிய இளம்பெண்.!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பெண் ஒருவர் போலியான தங்க நாணயங்களைக் கொடுத்து பலரையும் ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

நகரின் பரபரப்பான பகுதிகளில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையும் ஒன்று. தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் அந்த இடத்தில் ஒரு பெண் பல பேரை நூதனமாக ஏமாற்றி இருக்கின்றார். மருத்துவமனை நுழைவாயிலில் நிற்கும் அவர் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு அங்கு வருபவர்களிடம் ‘என்னுடைய தந்தைக்கு உடம்பு சரியில்லை. இந்த தங்க நாணயத்தை வைத்துக்கொண்டு 500 ரூபாய் மட்டும் கொடுங்கள்’ என்று கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

பலரும், தங்கநாணயம் 500 ரூபாய்க்கா என சோகமாக இருக்கும் அந்த பெண்ணை நம்பி பணத்தைக் கொடுத்து விடுகின்றனர். அதன் பின்னர் அவை அனைத்தும் கவரிங் நகைகள் என்று தெரிந்து தான் ஏமாந்ததை அறிகின்றனர்.

இதுபோல பல மோசடிகள் அங்கே நடந்ததை தொடர்ந்து பிரியா என்ற அந்த பெண்ணை காவல்துறையினர் கண்டுபிடித்து இருக்கின்றன. இதுபோலவே பிரியா முதியவர் ஒருவரையும் ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது.