2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய்..!

தமிழகத்தின், சேலம் அருகே இளம் பெண் ஒருவர் அவர் பெற்ற இரண்டு பெண் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து, பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த கவிதா என்பவர், இவருக்கு 12 வயது மற்றும் 6 வயது கொண்ட திவ்யஸ்ரீ மற்றும் ஸ்ரீமதி என்னும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் கவிதா தனது மகள்களுக்கு  விஷம் கொடுத்திருக்கிறார்.

அதன் பின்னர்  தானும் தற்கொலை செய்து கொண்டார்.  இதில் திவ்யஸ்ரீ இறந்துவிட ஸ்ரீமதிக்கு அரசு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.