மாத்திரைகளில் இருக்கும் சிவப்பு கோடு எதற்கு தெரியுமா.?

தற்போதைய வாழ்க்கை முறையில் டெக்னாலஜி உலகமானது, சரியான தூக்கமின்மை மற்றும் பல வியாதிகளை நமக்கு ஏற்படுத்துகின்றது. குறிப்பாக ஒபிசிட்டி என்று கூறப்படும் உடல் பருமன் நோய் பலருக்கும் ஏற்பட்டு இருக்கின்றது. இந்த உடல் பருமன் நோய் காரணமாக பல்வேறு வியாதிகள், பக்க விளைவுகளை அனுபவித்து வருகின்றனர்.

முன்பெல்லாம் சர்க்கரை வியாதி மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தது. ஆனால், தற்போது அந்த வியாதி பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. சில நேரங்களில் தலைவலி, சாதாரண காய்ச்சல் என்று நினைக்கும் விஷயங்கள் கூட மிகவும் பூதாகரமான ரிசல்ட் களை கொடுக்கின்றது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சில மருந்துகளை தானே எடுத்துக் கொள்வதுதான்.

இது பல நேரங்களில் மிகவும் ஆபத்தில் கொண்டு போய் நிற்கின்றது. பொதுவாக எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் மருத்துவரை அணுகி முறைப்படி அவர் பரிந்துரைத்த பிறகுதான் மாத்திரை சாப்பிட வேண்டும்.

சில மாத்திரைகளில் சிவப்பு கோடு போடப்பட்டிருக்கும் இந்த மாத்திரைகளை எக்காரணம் கொண்டும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடவே கூடாது. அதற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தான் அந்த சிவப்பு கோடானது மாத்திரைகளில் போடப்பட்டு இருக்கின்றது.