இறுதி முடிவெடுத்த பிரபல விமான நிறுவனம்..!

அமெரிக்காவை சார்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் விமான நிறுவனம் தயாரித்த 737 மேக்ஸ் போயிங் ரக விமானம் கடந்த 5 மாதங்களில் இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியா நாடுகளின் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானது.

இந்த இரண்டு விபத்துகளிலும் மொத்தமாக 346 பேர் பரிதாபமாக பலியான நிலையில்., விமானத்தில் பயணம் செய்த ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்., அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்துகளின் காரணமாக விமானத்தின் பாதுகாப்பு கேள்விகுறியாகவே., இது தொடர்பான விசாரணையில் போயிங் 737 விமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பத்தில் கோளாறு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து உலக நாடுகள் அனைத்திலும் போயிங் 737 ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இந்த பிரச்சனையை சரி செய்து வரும் 2020 ஆம் வருடத்திற்குள் பயன்பாட்டிற்குள் கொண்டு வரலாம் என்று எதிர்பார்த்து நிர்வாகம் காத்திருந்தது.

இந்த நிலையில்., இதற்கு அமெரிக்க போக்குவரத்துக் கழகம் மறுப்பு கூறியுள்ளதன் காரணமாக., போயிங் 737 விமானத்தின் தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்துவதாகவும்., நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும்., இந்த நெருக்கடியிலிருந்து நிறுவனத்தை மீட்க நீண்டகாலம் ஆகும் என்றும்., முதலீட்டாளர்களின்  என்பதாலும் நிலைத்தன்மையை மீது சந்தேகம் உருவாக முதலீட்டாளர்கள் கடும் எதிர்ப்பை சந்திக்க முடிவு எடுத்துள்ளதாகவும் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.