பொன்னியின் செல்வனில் இருந்து நீக்கப்பட்டாரா வைரமுத்து?

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற கதையை தற்போது இயக்குனர் மணிரத்னம் அவர்கள் படமாக்கி வருவது நம் அனைவருக்கும் தெரியும்.

இப்படத்தில் யார் யார் நடிக்க போகிறார்களில் என்பதில் இருந்து டெக்னீஷியன்கள் வரை படக்குழு அறிவித்திருந்தனர். முதலில் இப்படத்தில் வைரமுத்து இருக்கிறார் என்ற சில தகவல் இணையத்தில் கசிந்தது.

இந்நிலையில் இப்போது அறிவித்திருந்த லிஸ்ட்டில் வைரமுத்து அவர்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இதனால் இப்படத்தில் இருந்து வைரமுத்து நீக்கப்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் அவர் மீடூ புகாரில் சிக்கியவர் என்பதால் படத்திற்கு எதாவது பிரச்சனை வரும் என எண்ணி மணிரத்னம் அவர நீக்கிவிட்டாரோ என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது உண்மையா என்பது அதிகாரப்பூரவமான தகவல் வந்தால் தான் தெரியவரும். அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும்.