கணவனுக்கு மனைவி குறைவாக மட்டனை சாப்பிட கொடுத்ததால், ஆத்திரமடைந்த கணவன் அந்தபெண்ணை எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியிருக்கிறது.
மும்பையில் ஜீயி கோமதே என்ற கிராமத்தில் வசிக்கும் மாருதி சரோத் என்பவரும், அவரின் மனைவி பல்லவி சரோத் இருவரும் தினக்கூலி வேலைக்கு செல்பவர்கள். இவர்களுக்கு 4 குழந்தைகளும் உள்ளனர்.
இதைத்தொடர்ந்து, இரவு கணவனுக்கு உணவு பரிமாரியுள்ளார். அப்போது குறைவான அளவில் மட்டன் இருந்ததாக கணவன் சரோத் ஆத்திரமடைந்துள்ளார்.
அதைத்தொடர்ந்து சண்டையில் மனைவியின் மேல் மண்ணெண்ணெயை அவரை தீயிட்டு கொளுத்தியுள்ளார். தற்போது மனைவி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.