படங்கள் தயாராவதை விட அந்த படத்தை மக்களிடம் அதிகம் கொண்டு போய் சேர்க்க தான் படக்குழு அதிகம் போராடுகிறார்கள்.
அப்படி தங்களது படத்தை புரொமோட் செய்ய பலரும் வித்தியாசமாக யோசிக்கிறார்கள். தெலுங்கில் நாளை சாய் தேஜா, ராஷி கண்ணா நடிப்பில் Prati Roju Pandaage என்ற படம் வெளியாக இருக்கிறது.
இப்பட புரொமோஷனுக்காக படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகை ராஷி கண்ணா ஹைதராபாத்தில் உள்ள பிரபல திரையரங்கில் டிக்கெட் விற்றுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து டிக்கெட்டும் அவரிடம் வாங்கியுள்ளனர்.