நடிகை இலியானா நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். தன் ஆஸ்திரேலிய காதலரை பிரிந்த அவர் தற்போது இந்தியாவில் படவாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
அவரை தல அஜித்தின் வலிமை படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது என்றும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் இலியானாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. அவர் குண்டாகி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு அந்த புகைப்படத்தில் இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.