உலகநாயகனின் இரண்டு மகளும் தற்போது சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார்கள். ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு கொள்ளும் அளவில் கவர்ச்சியாக தோற்றம் உடையவர்களாக இருக்கிறார்கள்.
ஏழாம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ருதி ஹாசன். இவர் தற்போது தமிழ், தெலுங்கு என்று முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இதை தொடர்ந்து, ஹிந்தி படம் ஒன்றின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிய கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன், தமிழில் தல அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். சமீபத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் கடாரம் கொண்டான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடித்துள்ள “அக்னிச்சிறகுகள்” படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், இவர் விழாக்களில் கவர்ச்சி உடையில் தோன்றுவதோடு, கொஞ்சம் தூக்கலான கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறார். கவர்ச்சியில் அக்கா ஸ்ருதிஹாசனை தூக்கி சாப்பிட்டு விடுவார் போலிருக்கே என்று கூறி நெட்டிசன்கள் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.