2020 ஆம் ஆண்டு வருடத்திற்கான ஜபிஎல் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலமானது பெங்களூரில் நடைபெற்று வருகிறது. 332 வீரர்களில் 73 வீரர்களை தேர்வு செய்ய எட்டு அணிகளும் மல்லுக்கட்டி நிற்கின்றன.
இதுவரை இன்று நடைபெற்ற ஏலத்தில், இந்திய வீரர்கள் பலரும் ஏமாற்றமே அடைந்தனர். புஜாரா, விஹாரி, யூசுப் பதான், ஸ்டூவர்ட் பின்னி போன்ற வீரர்களை யாருமே சீண்டக்கூடவில்லை. கொல்கத்தா அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட ராபின் உத்தப்பாவை ராஜஸ்தான் அணி ரூ.3 கோடிக்கு எடுத்துள்ளது
ஆனால் வெளிநாட்டு வீரர்களை பொறுத்தவரை மூன்று பேர் 10 கோடிக்கு மேல் ஏலம் போயுள்ளார்கள். ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ்-ஐ கொல்கத்தா அணி 15.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் க்ளென் மேக்ஸ்வெல்-ஐ பஞ்சாப் அணி 10.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் கிறிஸ் மோரிஸை 10 கோடி ரூபாய்க்கு பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
இங்கிலாந்தின் சாம் குர்ரானை 5.50 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இயான் மோர்கனை கொல்கத்தா அணி 5.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச்-ஐ பெங்களூர் அணி 4.40 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி கிறிஸ் லைன்-ஐ இரண்டு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இங்கிலாந்தின் ஜேசன் ராயை டெல்லி அணி 1.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ்-ஐ 1.5 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
அடுத்த கட்ட ஏலமானது இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.