குட் நியூஸ் படபிடிப்பின் போது நடிகை கரீனா கபூர் தன் முகத்தில் பலமுறை துப்பியதாக நாடிகர் அக்ஷய்குமார் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ராஜ் மேத்தா இயக்கத்தில் அக்ஷய்குமார், நடிக்கும் குட்நியூஸ் படம் வரும் 27 ஆம் திகதி திரையறங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தில் நடிகை கரீனாகபூரும், கியாரா அத்வானியும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகர் அக்ஷய்குமாரும், கரீனாகபூர் மற்றும் கியாரா அத்வானியும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
அந்த வகையில்,அக்ஷய், கரீனா, தில்ஜித், கியாரா ஆகியோர் கபில் சர்மா நடத்தும் தி கபில் சர்மா ஷோவில் கலந்து கொண்டனர்.
அப்போது, குட் நியூஸ் படத்தில் நடித்தபோது பிரசவ காட்சியில் கரீனா குழந்தை வெளியே வர புஷ் பண்ண வேண்டும். அவர் கத்திக் கொண்டே தொடர்ந்து என் முகத்தில் துப்பினார்.
கரீனா பல முறை என் முகத்தில் அவர் துப்பியதால் நான் மீண்டும் மேக்கப் போடும்படி ஆகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.