13 வயது மகளுக்கு தந்தையால் ஏற்பட்ட கொடூரம்!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனது வளர்ப்பு மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 35 ஆண்டுகள் சிரை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை அடுத்த நாரிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனப்பா.

செங்கல் சூலை தொழிலாளியான இவர், 13 வயது சிறுமி ஒருவரை தத்தெடுத்து வளர்த்து வந்தார்.

குறித்த சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், பள்ளியில் அடிக்கடி சிறுமி சோர்வுடன் காணப்பட்டதால், ஆசிரியர்கள் பிரச்சனை குறித்து கேட்டுள்ளனர்.

அப்போது, சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தை அழுதுகொண்டே கூற, உடனே அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சீனப்பா மீது புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் வளர்ப்பு தந்தையான சீனப்பா தன்னை பல முறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததும், அதற்கு நாகேஷ் என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

கடந்த 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சீனப்பா மற்றும் நாகேஷ் ஆகியோரின் வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றம் தற்போது பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தைக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும் பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்த நாகேஷிற்கு 12 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.