ஓமந்தையில் திடீர் சோதனை!

வவுனியா ஓமந்தை கொந்தக்காரங்குளம் பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கி ரவையுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 12.30 மணியளவில் வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை கொந்தக்காரங்குளம் பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற வவுனியா பொலிசார் வீட்டினை சோதனை செய்த போது வீட்டிற்கு முன்பாகவுள்ள பூச்சாடியிலிருந்து T56 ரக துப்பாக்கி ரவைகள் 189ம் , எம்ரி ரவைகள் 154 ம் வைத்திருந்ததன் குற்றச்சாட்டில் 47வயதுடைய நபரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.