இன்றுள்ள காலகட்ட நிலையில் பல விதமான காலநிலைகளின் மாறுபட்டால் பல விதமான புதுப்புது நோய்களுக்கு ஆளாகி ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில்., அமெரிக்காவில் உள்ள இளம் வயதுள்ள பெண்களை அதிகளவு தாக்கும் வைரஸ் நோய்க்கு 17 வயதுடைய சிறுமி மரணமடைந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள இளம் வயதுள்ள நபர்களை மூளை வீக்க நோய் என்று கூறப்படும் முத்த நோய் தாக்கி வருகிறது. இந்த நோயானது எப்ஸ்டென் பார் என்ற வைரலின் காரணமாக ஏற்படுகிறது. இந்த வகையான நோய் உமிழ்நீர் மற்றும் உடலின் திரவத்தால் பரவும் வைரஸ் நோய்கள் ஆகும். இந்த வைரஸின் தாக்கமானது மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தி மரணத்தை விளைவிக்கிறது.
இந்த நோய் பொதுவாக உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பதால் அதிகளவு பரவுவதன் காரணமாக முத்த நோய் என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் வசித்து வந்த சிறுமியின் பெயர் அரியானா ரே பஸ் (வயது 17). இந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக முத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும்., தீவிர சிகிச்சைக்கு பின்னர் பெண் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்., பெண்ணின் தந்தை இது தொடர்பாக தெரிவித்த சமயத்தில்., எனது மகள் அரியானாவின் உடல்நிலை மோசமாகி., குளியலறையில் திடீரென மயங்கி விழுந்தார். இவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சமயத்தில் முதலில் கால்கள் செயலிழந்ததாக தெரிவித்தனர். பின்னர் மூளை செயல்படாமல் அவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்தனர். இவளது உடல் உறுப்புகளை தற்போது தானம் செய்துள்ளோம் என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.