தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகர் நடிகைகள் சில காரணங்களால் தற்கொலை செய்து கொண்டு இறக்க நேரும். அதுபோல தமிழ் சினிமாவில் பார்வை ஒன்றே போதும் என்ற படத்தின் மூல நடிகையாக அறிமுகமானவர் நடிகை மோனல்.
இவர் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் படவாய்ப்புகள் கிடைத்து நடித்து வந்தார். இவருடன் தமிழில் முதல் படத்தில் நடித்த நடிகர் குணால் மீது காதல் வைத்திருந்தார் என்று வதந்தி பரவியது. இதை முற்றிலும் பொய் என்று முன்னணி நடிகையும் மோனலின் சகோதரியுமான நடிகை சிம்ரன் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
2002ல் சில காரணங்களாக மோனல் தற்கொலை செய்து இறந்துள்ளார். தமிழ் சினிமாவையே தூக்கிப்போட்டது இந்த தகவல். இதனால் அவரது குடும்பமும் அதிர்ச்சியில் இருந்தது.
இத்தற்கொலைக்கும் நடிகர் குணால் தான் காரணம் என்று பலர் கூறி வதந்தியை ஏற்படுத்தினர். ஆனால் இதற்கு நடிகை சிம்ரன் எதிர்ப்பு கூறினார். மோனல் இறப்பதற்கு கலா மாஸ்டரின் சகோதரரான பிரசன்னா சுஜித் தான் காரணம் என்று பேட்டியில் கூறி இருந்தார்.
மோனல் பிரசன்னா இருவரும் காதலித்து வந்ததாகவும், சில காரணத்தால் மோனல் காதலை முறித்துக் கொண்டதாகவும், இதனால் மனமுடைந்த மோனல் தற்கொலை செய்து கோண்டதாக கூறினார். நடிகை மும்தாஜ் கலா மாஸ்டருக்கு நெருக்கமானவர் என்பதால் இந்த விடயத்தை மறைத்துவிட்டதாகவும் நடிகை சிம்ரன் கூறியிருந்தார்.
இதைதொடர்ந்து குணால் 2008ல் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி நடிகை சிம்ரன் தன் சகோதரியின் தற்கொலைப்பற்றி கேள்வி கேட்பதால் தான் பல பேட்டிகளையும், சினிமா விழாக்களிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்துள்ளாராம்.