பாலிவுட்டின் பிரபல நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழில் சிறு படங்களில் நடித்தாலும் ரஜினியின் கபாலி படத்தில் நடித்து பிரபலமானார். இந்தி, பெங்காலி, தெலுங்கு, மராத்தி, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து பிசியாகவுள்ளார். தற்போது ஆங்கிலத்தில் ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.
மீ டூ பிரச்சனை பற்றி பேசி போல்ட்டாக பேசியும், தன்மீது திணிக்கப்படும் சர்ச்சைகளுக்கும் எதிராக பேசும் நடிகை என்ற பெயரையும் பெற்று வருகிறார். தன் கவர்ச்சியை காட்டுவதற்கு எனக்கு உரிமை உள்ளது. நான் வெளிநாட்டில் சில காலம் இருந்துள்ளேன் அதன் கலாச்சாரத்திற்கேற்ப நான் அப்படிதான் இருப்பேன் என்று ஊடகத்தில் தைரியமாக பதிலளித்தார்.
இந்நிலையில் தனியார் ஊடகத்திற்கு பேட்டிகொடுத்த ராதிகா, சில ஆண்டுகளுக்கு முன் பாலிவுட்டில் ஆயுஸ்மான் இயக்கிய படத்தில் கமிட்டாகி ஓய்வு நேரத்தை செலவிட வெளிநாட்டிற்கு சென்றேன். அங்கு அளவுக்கு மீறி பீர் குடித்தும் உணவை உட்கொண்டும் வந்தேன்.
இதனால் என் உடல் எடை சற்று ஏறி மாற்றமடைந்தது. ஓய்வு முடிந்து வீடு திரும்பியதும் படபிடிப்பிற்கு சென்றேன் அப்போது இப்படி உடல் எடை அதிகரித்தால் எப்படி நடிக்க முடியும் என்று படத்திலிருந்து நீக்கிவிட்டார்கள்.
பீர் குடிப்பதையும் தேவையற்ற உணவுகளை அருந்துவதையும் குறைத்து ஒல்லியாக இருக்க வேண்டும் என்பதை நினைத்து உழைத்து வருகிறேன் என்று கூறினார்.