தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர்களில் ஒருவர் தான் இந்த சரவணன் அருள். இவர் ஜேடி- ஜெர்ரி இயக்க இருக்கும் படம் ஒன்றில் கதாநாயகனாக அறிமுகமாகம் ஆகிறார். இந்த திரைப்படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் திரையுலகம் அவளோடு காத்து கொண்டிருக்கிறது.
இவர் மீது, பல்வேறு விதமான கேலி கிண்டல்களை மீறியும், தன்னம்பிக்கையுடன் கடைக்காக எடுக்கப்படும் விளம்பரங்களில் நடித்து தமிழக அளவில் மிகவும் பிரபலமானவர் சரவணன் அருள். மேலும், இவ்வாறு விளம்பரங்களில் நடித்து இன்று கதாநாயகனாக வளர்ந்திருக்கிறார் என்றல் அவரது தன்னம்பிக்கையே காரணம்.
இந்த படத்தை அஜித்தின் உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்குகின்றனர், படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ், வட இந்திய மாடல் ஒருவர் ஹீரோயினாக நடிக்கின்றார்.
இதை தொடர்ந்து, இந்த படத்தில் பாடல் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 10 கோடி செலவில் பிரம்மாண்ட அரண்மனை போன்ற அரங்கு அமைக்கப்பட்டு இந்த பாடல் காட்சி எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடக்க காலத்தில் நடிக்க சிரமப்பட்ட அருள், தற்போது பல மடங்கு முன்னேறிவிட்டாராம்.
இந்த பாடல் காட்சியில் நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடி அசத்திவிட்டாராம். அருளின் நடனத்தைப் பார்த்து நடனக்கலைஞர்கள் அவரை பாராட்டினார்கள் என்று கூறப்படுகிறது.
படப்பிடிப்பு தலத்தில் வெளியாகிய காட்சியில் பெட்ரூம் சீன் போல ஒரு காட்சி வைக்கப்பட்டிருப்பதாக புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றது. எனவே, இதில் முத்தக்காட்சியும் இடம்பெற்றிருக்கும் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.