பிரியங்கா வழக்கில் என்கவுண்டர் செய்யப்பட்ட நால்வரின் சடலங்கள் தொடர்பான முக்கிய உத்தரவை ஹைதராபாத் உயர்நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது.ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கடந்த மாதம் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்னகேசவலு ஆகிய நால்வரும் பொலிஸ் பிடியில் இருந்து தப்ப முயன்றதால் கடந்த 6ஆம் திகதி சுட்டு என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.நான்கு பேரின் சடலங்களும் தற்போது நீதிமன்ற உத்தரவின் படி காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
நால்வருக்கும் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் எனவும் சடலங்களை தங்களிடம் ஒப்படைக்குமாறும் அவர்களின் குடும்பத்தார் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.இது தொடர்பில் நபர் ஒருவர் ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த மனுவில், நால்வரின் சடலத்தையும் அவர்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.இதை நேற்று விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்னகேசவலு ஆகியோரின் சடலம் தொடர்ந்து மருத்துவமனையில் பாதுகாக்கப்படுமா அல்லது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுமா என இன்று தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.