விமானம் வானில் பறந்து செல்லும் போது அவதானித்தால், அதில் பயணம் செய்ய முடியாதா? என்ற ஏக்கம் பாமர மக்களுக்கு அதிகமாகவே இருக்கும்.
ஆனால் தற்போது ஏற்படும் விமான விபத்துக்கள் ஒருபக்கம் அவ்விதமான ஆசையை சற்று குறைத்துவிடுகின்றது என்றே கூறலாம்.
சரி விமானத்தின் கதாநாயகர்களாக இருக்கும் பைலட்டுகள் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? தெரியாத பல விடயங்களை தற்போது தெரிந்து கொள்ளலாம்…
- பைலட்களுக்கு முதலில் Flight Simulator என்ற பயிற்சி வழங்கப்படுமாம். ஃப்ளைட் சிமுலேட்டர் என்பது விமானங்களின் யதார்த்தமான பிரதிபலிப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த இயந்திரமானது பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
- குறித்த பயிற்சி முடிந்ததும் பைலட்கள் நேராக பயணிகளுடன் கூடிய பாசஞ்சர் விமானங்களை இயக்கும் பணிக்கு செல்வார்கள். அவ்வாறு சென்றாலும் அவருடன் அனுபவம் வாய்ந்த பைலட் ஒருவரும் செல்வாராம். இவரின் சோதனைக்கு பின்னரே சுயமாக விமானத்தினை ஓட்டுவதற்கு பைலட்டுகள் அனுமதிக்கப்படுவார்கள்.
- Flight Simulator பயிற்சியானது 8 மாதங்களுக்கு ஒருமுறை பைலட்டுகள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டுமாம். பைலட்டுகள் தங்களது ஓட்டுனர் உரிமத்தினை புதுப்பித்துக்கொள்ள இந்த நடைமுறையினை பின்பற்றுகின்றனர். ஆனால் போயிங் 777 விமானங்களை இயக்கும் பைலட்டுகளுக்கு இந்த பயிற்சி 6 மாதத்திற்கு ஒரு முறை கட்டாயம் செல்ல வேண்டுமாம்.
- தற்போது ஓட்டிக்கொண்டிருக்கும் விமானத்தினை விட்டு வேறு விமானத்தினை இயக்க வேண்டும் என்றால் அதற்கு 8 முதல் 12 வாரங்கள் பயிற்சிக்கு செல்ல வேண்டுமாம்.
- ஏனென்றால் ஒவ்வொரு விமானமும் வெவ்வேறு விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்பதே. இந்த பயிற்சியில் புதிதாக இயக்கவுள்ள விமானத்தின் கண்ட்ரோல்கள் உள்பட அனைத்து அம்சங்கள் குறித்தும் விரிவாக பயிற்சி வழங்கப்படும்.
- பைலட்டுகள் குடும்பத்தினை பிரிந்து அதிக காலம் இருக்க வேண்டியதால், சில பைலட்டுகள் தங்களது குடும்ப புகைப்படத்தினை தனது தொப்பிக்குள் வைத்துக்கொள்வார்களாம். தங்களுக்கு விருப்பமானவர்கள் தங்களுக்கு அருகே இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு கடைபிடித்து வருகின்றனர்.
- மேலும் விமானங்களை இயக்கும்போது, பைலட்களும், கோ-பைலட்களும் உணவை பகிர்ந்து கொள்ள கூடாது என்ற விதிமுறையும் இருக்கின்றது. இருவரும் ஒரே உணவை சாப்பிடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர். ஒரு உணவால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டால், மற்றொரு பைலட் பாதிக்கப்படுவார்கள் என்பதே காரணமாகும். இதனால் வெவ்வேறு உணவுகள் வழங்கப்படுகின்றது.
- வானில் இரண்டு விமானங்கள் சந்திக்கும் பொழுது லேண்டிங் லைட்கள் அல்லது Wing Inspection Lights- இவற்றினை பைலட்கள் ஒளிர செய்வார்கள். இவ்வாறு ஒளிர செய்யும் போது இவர்கள் ஹலோ செல்கிறார்கள் என்பது அர்த்தமாம்.