சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகர்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாட்டில் நடக்கும் பல விசயங்கள் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என சில அரசியல் பிரமுகர்கள் கருத்து கூறிவருகிறார்கள்.

அவர் நாட்டில் நடக்கும் வன்முறை மனதிற்கு வேதனையளிக்கிறது என தன் கருத்தை கூறினால் அதை சர்ச்சையாக்கி விவாதமாக்கி வேடிக்கை பார்ப்பது சிலரின் இயல்பாகிவிட்டது. தற்போது நாட்டில் குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டம் தீவிர அடைந்துள்ளது.

இது குறித்து அவர் தன் கருத்தை கூற பல கேள்விகள் கேட்டுள்ளார் அரசியல் பிரமுகர் சீமான். இந்நிலையில் திமுக பொருளாளரும் நடிகருமான உதயநிதி ரஜினியின் கருத்தினை விமர்சிக்கும் விதமாக கருத்து தெரிவித்திருப்பது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கோபத்தை உண்டாக்கியுள்ளது.