சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜெண்ட் சரவணா என்று அழைக்கப்படும் சரவணா அருள், தமிழ் சினிமாவில் கதாநாயனாக அறிமுகமாக உள்ளார்.
அவரின் வியாபார விளம்பரத்திற்கு மட்டும் நடித்து வந்த லெஜெண்ட் சரவணா, தற்போது கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். மிஸ் இந்தியா பட்டம் வென்ற “கீத்திகா திவாரி” அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
அஜித், விகரம் நடித்த உல்லாசம் மற்றும் விசில் போன்ற படங்களை இயக்கிய இரட்டையர்கள் ஜே.டி-ஜெர்ரி இயக்குகிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசை, வேல்ராஜ் ஒளிப்பதிவு போன்ற திறமையான தொழில்நுட்ப கலைஞர்களுடன் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறதாம்.
டிசம்பர் 1ஆம் தேதி இந்த படத்தின் பூஜை நடைபெற்றது, லெஜெண்ட் சரவணா மற்றும் படக்குழுவினர் பூஜையின் பொது எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஷங்கர் படத்தையே மிஞ்சுமளவு ரூபாய் 10 கோடியில் அரண்மனை போல் செட் அமைத்து பாடல் காட்சியை எடுத்துள்ளது படக்குழு, படப்பிடிப்பில் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களுடன் லெஜெண்ட் சரவணா நடனமாடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அவரின் வியாபார விளம்பரங்களில் நடிகைகளுடன் நடனமாடியதற்கே கிண்டலடித்து வந்த சமூக வலைதளவாசிகள், தற்போது படத்தில் நடிப்பதை ஏற்றுகொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.