முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தானை விஞ்சியது இலங்கை

கராச்சியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 271 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் நடைபெறும் இரண்டு போட்டித் தொடர்களில் பங்கேற்க இலங்கை அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.

இதைதொடர்ந்து, கடந்த 19ம் திகதி பாகிஸ்தான்-இலங்கை இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கராச்சியில் தொடங்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்கஸில் 191 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதனையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, தினேஷ் சண்டிமால் (74) மற்றும் தில்ருவன் பெரேரா (48) ஆகியோரின் நிதான ஆட்டத்தால் 271 ஓட்டங்கள் எடுத்தது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அப்ரிடி 5 விக்கெட்டுகளையும், முகமது அப்பாஸ் நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

80 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இரண்டாவது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 57 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஷான் மசூத் 21 ஓட்டங்களுடனும், அபிட் அலி 32 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.