தொகுப்பாளினி மணிமேகலையின் புதிய கெட்டப்…

பிரபல ரிவி தொகுப்பாளினி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டதையடுத்து அந்த நிகழ்ச்சி என்ன என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

பிரபல ரிவியில் தொகுப்பாளினியாக இருந்த விஜே மணிமேகலை நடன இயக்குனரான காதர் ஹுசைன் என்பவரைக் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இரு வீட்டினரும் இவர்களுக்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில் தற்போது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த சிறந்த காதல் ஜோடியாக விளங்கி வருகின்றனர்.

வாழ்வில் பல கஷ்டங்களையும், சவால்களையும் சந்தித்த இவர்கள் பிரபல ரிவி நிகழ்ச்சி கலந்துகொண்ட பின்பு ஒட்டுமொத்த ரசிகர்களின் உள்ளத்தை வென்றவர்களாக ஆகிவிட்டனர்.

தற்போது மணிமேகலை ஒரு வித்தியாசமான கெட்டப் ஒன்றினைப் போட்டுக்கொண்டு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் தான் அணிந்திருக்கும் ஆடை globusfashion-லிருந்தும், தான் அணிந்திருக்கும் ஹெட்செட் பிரபல ரிவியிலிருந்தும், தான் அணிந்திருக்கும் கூலிங் கிளாஸ் சக தொகுப்பாளருடையது என்றும் இவை அனைத்தும் OC என்று வெளிப்படையாக போட்டுள்ளார்.