சிவகார்த்திகேயன் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படம் திரைக்கு வந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பில் இருந்தது.
ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை, படத்திற்கு முதல் நாள் பெரிய ஓப்பனிங் எதுவும் கிடைக்கவில்லை, நாம் முன்பே குறிப்பிட்டது போல் இப்படம் முதல் நாள் ரூ 3.2 கோடி வசூல் செய்துள்ளது.
இது தான் சமீபத்தில் சிவகார்த்திகேயன் படங்களிலேயே மிக குறைந்த முதல் நாள் வசூல் என கூறப்படுகின்றது, இது விநியோகஸ்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் இன்னும் பள்ளிகளுக்கு பரீட்சை நடந்து வருவதே என்று கூறப்படுகின்றது.