தமிழகத்தின் சென்னையை அடுத்துள்ள பெரும்பாக்கம் பசும்பொன் நகர் கண்ணகி தெரு பகுதியை சார்ந்தவர் அய்யனார் (வயது 31). இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் அஞ்சலி (வயது 21). இவர்கள் இருவருக்கும் நான்கு மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
ஐயனாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும் வழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளார். தனது கணவன் எப்படியாவது திருந்திவிட மாட்டானா? என்று எண்ணி மதுபழக்கத்தை கைவிட அஞ்சலி வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் கணவன் – மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நேரத்தில்., நேற்று முன்தினத்தன்று இரவு இதே பகுதியில் வசித்து வந்த அஞ்சலியின் சகோதரிக்கு தொடர்பு கொண்ட ஐயனார்., அஞ்சலிக்கு உடல்நிலை சரியில்லை என்றும்., மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டியிருப்பதால் வீட்டிற்கு வாருங்கள் என்று கூறியுள்ளான்.
இதனைக்கேட்டு பதறிப்போன அஞ்சலியின் சகோதரி மற்றும் அவரது கணவர் வீட்டிற்கு சென்று பார்க்கையில்., அஞ்சலி தரையில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். மேலும்., ஐயனார் வீட்டில் இல்லை. அஞ்சலி மயக்கத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர்.
அஞ்சலியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்ததை அடுத்து., அதிர்ச்சியடைந்த இருவரும் ஐயனார் கொலை செய்து தப்பியோடியதை எண்ணி வருந்தியுள்ளனர். மேலும்., இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை ஏற்ற காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அஞ்சலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து தலைமறைவான ஐயனாரை தேடி வந்த நிலையில்., அங்குள்ள பெரும்பாக்கம் ஏரி பகுதியில் மறைந்திருந்த ஐயனாரை காவல் துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக ஐயனாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்., தனக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால்., இதனை எனது மனைவி கண்டித்து வந்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி திருமணம் முடிந்ததில் இருந்து எங்களுக்குள் சண்டை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில்., வேலூரில் இருக்கும் அஞ்சலியின் உறவினர் இறந்துவிட்ட நிலையில்., துக்க வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அஞ்சலி கூறியிருந்தார். திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகவில்லை என்பதால் கேட்ட காரியத்திற்கு செல்ல வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்தேன்.
இதனால் வழக்கம்போல் எங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் எனது மது போதையின் காரணமாக அஞ்சலியின் கன்னத்தில் அறைந்தேன். பின்னர் அவரை கழுத்தை நெரித்து கீழ் தள்ளியதில்., கீழே விழுந்ததும் கடையினை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டேன். ஒரு மணிநேரம் கழித்து வந்த போது அவள் இறந்தது எனக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவரது சகோதரியிடம் பொய் கூறிவிட்டு தப்பி சென்றேன் என்று தெரிவித்துள்ளார்.