இந்த உலகம் முழுவதிலும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் பல்வேறு பாலியல் தொல்லைகள் மற்றும் பாலியல் பலாத்காரங்கள் குறித்த செய்தியானது நம்மிடையே பெரும் அதிர்ச்சியை பதிவு செய்கிறது.
இந்தியாவின் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் அருகேயுள்ள கொடுமனக்குண்டாவில் 34 வயதுடைய பெண்மணி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 40 வயதுடைய கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
கல் உடைக்கும் பணியை செய்து வந்த பெண்மணியை., சம்பவத்தன்று ரூ.500 சம்பளத்திற்கு கட்டிட பணிக்கு கட்டிட தொழிலாளி அழைத்து சென்றுள்ளான். இவர்கள் பணியாற்றி வந்த கட்டிடத்திலேயே கொடூரன் பனை கள்ளை அருந்தியுள்ளான்.
மேலும்., இவன் அழைத்து வந்த பெண்மணிக்கு வலுக்கட்டாயமாக கள் அருந்த வைத்த பின்னர்., கள்ளின் வீரியம் தாங்க இயலாமல் பெண் மயங்கி விழுந்துள்ளார்.
பெண் மயக்கத்தில் இருந்த நேரத்தில்., போதையில் இருந்த கொடூரன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மயக்கம் தெளிந்ததும் தனது ஆடைகள் களையப்பட்டு இருப்பதை உணர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதை உணர்ந்துள்ளார்.
மேலும்., மயக்கத்தில் இருந்து எழுந்த பெண்ணை கண்டதும் கட்டிட தொழிலாளி ஓடியதை அடுத்து உண்மை புரியவந்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்தார்.
இதனையடுத்து இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு அங்குள்ள வினோபா நகரை சார்ந்த கட்டிட தொழிலாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.