பிரபல நடிகரின் பாடலுக்கு பிக்பாஸ் புகழ் சாக்‌ஷி சூப்பரான நடனம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். இந்நிகழ்ச்சியில் அவருக்கு தான் முதல் குரும் படம் என்று சொல்லலாம்.

இந்நிகழ்ச்சியில் அவர் கவின் உடனான காதல் வலையிலும் சிக்கினார். பின் அவர்களுக்கு மனக்கசப்பும் ஏற்பட்டது. பிக்பாஸ்க்கு பிறகு சாக்‌ஷி தற்போது படங்களில் கமிட்டாகி வருகிறார்.

ஃபிலிம் பேர் விருது விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் 2.0 படத்தின் இந்திர லோகத்து சுந்தரியே என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இதற்கான முன்னோட்டம் பார்த்த போது அவர் ஆடிய வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ரஜினியுடன் அவர் காலா படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.