நாட்டின் 13 மாவட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அடைமழையுடனான காலநிலை காரணமாக இதுவரையில் 3314 குடும்பங்களை சேர்ந்த 12000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் 90 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
புத்தளம் மற்றும் மொனராகலை மாவட்டத்திலேயே அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள அனர்த்தம் காரணமாக இடம்பெற்ற விபத்துக்களில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக 47 வீடுகள் முழுமையாக அழிவடைந்துள்ள நிலையில் ஆயித்திற்கும் அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
நேற்று மாலை அநுராதபுரம், கேகாலை, ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் கண்டி மாவட்டத்திலும் கடும் காற்று வீசியுள்ளது.
இந்த நிலையில் நுவரெலியா, மாத்தளை, கண்டி மற்றும் பதுளை மாவட்டத்திலும், லக்கல, நாவுல, வில்கமுவ, ரத்தோட்ட, உடுதும்பர, வலப்பனை, பதுளை, பண்டாரவளை, வெலிமடை, ஹாலிஎல, ஊவபரனகமுவ, எல்ல, ஹல்தும்முல்ல, பஸ்ஸரை, லுனுகல, ஹப்புத்தளை, மற்றும சொரனாதோட்ட ஆகிய பிரதேச செயலகங்கள் மண் சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.