கயல் ஆனந்தி கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்று உறுதியாக இருக்கிறார். இதன் காரணமாக அவரது மார்க்கெட் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமலே போனது. அதனால் தற்போது பேய் வேடத்தில் நடிப்பதற்கு இறங்கி விட்டார், தற்போது அவர் ஏஞ்சல் என்னும் திரைப்படத்தில் பேய் வேடத்தில் நடித்து வருகிறார்.
பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டமாட்டேன், ஆனால் பேய் வேடத்தில் கூட நடிக்க தயார் என அடி மட்டத்திற்கு இறங்கி வந்ததால் அவரது ரசிகர்கள் ஷாக் ஆகிறார்கள்.
கயல் திரைப்படம் தான் ஆனந்திக்கு முதல் திரைப்படம். அதை தொடர்ந்து அவர் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நடித்திருந்தார் ஆனால் அந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவரின் பெயர் பயங்கரமாக டேமேஜ் ஆனது, ரசிகர்களுக்கு அவர் மீது இருந்த எண்ணங்களும், நம்பிக்கையும் மாறிவிட்டது.
தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட கயல் ஆனந்தி இப்பொழுது தடம் தெரியாமல் போனது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.