டீயால் இவ்வளவு விளைவா???

பலருக்கும் ஒரு பழக்கம் இருக்கிறது. ஆபீசிலோ, வீட்டிலோ போக-வர டீ குடிப்பார்கள். அது பால் இல்லாத டீயோ, பால் சேர்த்த டீயோ, சூடாக 2 வாய் அவ்வப்போது குடித்தால் தான் வேலை ஓடுகிறது என்பார்கள். இதன் காரணமாகதான் நம் ஊர்களில் டீ கடைகள் அதிகம். அத்தனை கடைகளிலும் ஈ கூட்டம் போல் மக்கள் இருப்பார்கள். டீ ஓரிரு முறை குடிப்பது நல்லதே என்றாலும் இப்படி ஓட்டகம் போல் குடித்துக் கொண்டிருப்பது பல தீய விளைவுகளை ஏற்படுத்தும். அவை

இரும்பு சத்து உடலினுள் உறிஞ்சப்படுவது குறையும்.
அதிக படபடப்பு, மன உளைச்சல் உண்டாகும்.
தூக்கம் குறையும்
வயிற்றுப் பிரட்டல் ஏற்படும்
நெஞ்செரிச்சல் ஏற்படும்.
கர்ப்ப காலத்தில் சில பிரச்சினைகளைக் கொடுக்கலாம்.
தலைவலி ஏற்படும்.
மயக்கம் ஏற்படும்.
டீ குடிக்காமல் இருக்க முடியாத படபடப்பு ஏற்படும்.

எனவே ஓரிரு கப் டீ மட்டுமே குடித்து நன்மைகளைப் பெறுவோமாக.

இப்போது எல்லாம் கிரீன் டீ அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றது. அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. மார்பக புற்று நோய், பிராண்ட்ரேட் புற்றுநோய், வயிறு புற்று நோய் அபாயம் வெகுவாய் குறைகின்றது.

சர்க்கரை நோய், இருதய நோய் பாதிப்பை வெகுவாய்க் குறைக்கின்றது. ஆக கிரீன் டீ என்பதனை நமது சாதா டீக்குப் பதிலாக நாள் ஒன்றுக்கு 2 கப் கிரீன் டீ குடிப்பது நல்லது. 2 கப் அளவு போதுமானது. அதற்கு மேல் தேவையற்றது. ஆனால் காபி, சாதாரண டீ இவற்றையெல்லாம் குடித்துக் கொண்டு கிரீன் டீயும் குடிப்பது தவறு. காபி, சாதா பால் டீ, கறுப்பு டீ இவற்றினை விட்டு கிரீன் டீ மட்டும் 2 முறை குடிக்கலாம். இவை இன்றைய ஆய்வுகள் கூறுபவை.