திரைத்துறையினர் எதற்கெடுத்தாலும் பயப்பிடுகிறார்கள், எந்த ஒரு சமூக பிரச்சனையிலும் தனது கருத்துக்களை சொல்வதற்கு கூட தைரியம் இல்லாதவர்கள் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ள கருத்து திரைத்துறையினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவிற்கு ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தின் மூலம் அறிமுகமானார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். பின்னர் தமிழ் படங்களில் எந்த படமும் நடிக்கவில்லை, தற்போது A.L.விஜய் இயக்கத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பற்றி உருவாகும் தலைவி படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் குடியுரிமை சீர்திருத்த சட்டத்தை எதிர்த்து நாடுமுழுவதும் போராட்டங்கள் நடுத்துவருகிறது, நடிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் இது குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர், ஆனால் முன்னணி யாரும் இதை பற்றி வாயை கூட தீர்க்கவில்லையே இது குறித்து கங்கனா ரனாவத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு கங்கனா ரனாவத், பாலிவுட் நடிகர்கள் குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்து வாய் திறக்காமல் இருப்பதற்கு வெட்க பட வேண்டும், அவர்கள் கோழைகள் என்றும் முதுகெலும்பு இல்லாதவர்கள் என்றும் விமர்சித்துள்ளார்.