மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 40 வயதான விட்டல் லோத் அவரது மனைவி மற்றும் அவர் குடும்பத்தாரின் துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவருக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது.
மாநகராட்சியில் பணிபுரிந்து வந்த விட்டலுக்கு கண்களில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பாதிப்பு ஏற்பட்டதால் தனது பணியை அவர் ராஜினாமா செய்து வீட்டிலேயே இருந்து வந்தார். இதிலிருந்து விட்டலுக்கும் அவர் மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டதால் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி விட்டல் மனைவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த சூழலில் இரு தினங்களுக்கு முன்னர் விட்டல் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார் அவரின் சடலத்தை மீட்ட நிலையில் விட்டல் எழுதி வைத்திருந்த கடிதம் கிடைக்கபெற்றது.அதில் என் மனைவி என்னிடம் பணம் கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வந்தாள் எனவும் அவள் குடும்பத்தாரும் என்னை மிகவும் கஷ்டப்படுத்தினார்கள் எனவும் அவர்கள் தான் என இறப்புக்கு காரணம் எனவும் எழுதப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து விட்டல் மனைவி மற்றும் அவர் குடும்பத்தார் நால்வர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஆனால் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.