சோறு சரியாக வேகாததால் கேரளாவில்தாயை அடித்துக் கொன்ற மகனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து கட்டளையிட்டுள்ளது.திருச்சூரை சேர்ந்த ஜமிலாவை, இவரது மகன் ஹக்கிம் கடந்த 2015ம் ஆண்டு யூலை மாதம் 6ம் திகதி வீட்டிற்கு மதிய உணவு சாப்பிட வந்த மகன்ஹக்கிம், தனது தாய் தந்த சோறு சரியாக வேகாமல் இருந்ததால் கடும் கோபத்தில் பாத்திரத்தை எடுத்து ஜமிலாவின் கையை தாக்கியதுடன் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதனால்ஜமிலா நிலைகுலைந்து விழ மறுபடியும் ஓங்கி அடித்துள்ளார், இதனால் ஜமிலா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இதுதெடார்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்றுவழக்கு முடிவுக்கு வந்துள்ளது.நீதிமன்ற நீதிபதி ஆயுள்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.மேலும் 50,000 ரூபாய் அபராத தொகை விதித்ததுடன், அப்பணத்தை ஜமிலாவின் மகளுக்கு வழங்குமாறும் உத்தரவிட்டது.