தர்பார் பேச்சால் சர்ச்சை..!!

நடிகர் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் நடந்த தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தான் சிறு வயதில் கமல் போஸ்டர் மீது சாணி அடிப்பேன் என கூறியதற்காக அவரை பலரும் விமர்சித்தனர்.

அதற்கு கமலை நேரில் சந்தித்து விளக்கம் கொடுத்தார் ராகவா லாரன்ஸ். ஆனாலும் ட்ரோல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “நான் இனி தலைவர் சம்பந்தப்பட்ட எந்த விழாவிலும் பங்கேற்கமாட்டேன், அவரது அனுமதி இல்லாமல்” என கூறியுள்ளார்.

“இதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.அதை கூற விரும்பவில்லை” என்றும் கூறியுள்ளார் அவர்.