எப்போது தான் வெளிவரும் நரகாசூரன்?

துருவங்கள் பதினாறு படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கிய படம் தான் நரகாசூரன். இப்படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா போன்ற நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி போய் கொண்டே இருந்தது.

இந்நிலையில் தற்போது இப்படம் வரும் மார்ச் மாதம் வெளிவரும் என்று சில தகவல்கள் கசிந்துள்ளது.

இப்படத்தின் ரிலீஸிற்கு பிறகு தான் மாஃபியா சாப்டர் 1 படத்தை வெளியிட முடிவு செய்துள்ளாராம் கார்த்திக் நரேன்.