விவசாய நடவடிக்கைகளின் பொழுது தம்முடைய விவசாயத்தை பாதுகாத்துக்கொள்ள விவசாயிகளுக்கு துப்பாக்கிகளை உபயோகிக்க இலங்கை அரசாங்கம் மீண்டும் அனுமதி வழங்க முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து இலங்கை அதிபரான கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் செஹான் சேமசிங்க, விவசாயிகள் துப்பாக்கி வைத்து கொல்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் விவசாயிகளுக்கு பெற்று தருமாறு ஜனாதிபதி உத்தரவு வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
முந்தைய காலத்தில் இருந்து விவசாயிகள் தங்களுடைய விவசாய நடவடிக்கைகளின் பொழுது விவசாயத்தை பாதுகாத்து கொள்ள துப்பாக்கிகளை உபயோகித்து வந்துள்ளனர். இருப்பினும், நாட்டில் நிலவிய யுத்தநிலை காரணமாக பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் துப்பாக்கிகள் வைத்திருப்பதை இலங்கை அரசாங்கம் தடை விதித்து இருந்தது.
அதன்படி, விவசாயிகளுக்கும் இந்த தடையானது விதிக்கப்பட்டது. இருப்பினும், அந்த தடையை நீக்கி அவர்களுக்கு விவசாய நடவடிக்கைகளுக்காக துப்பாக்கி உபயோகிக்க தற்போது அனுமதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.