பிறருக்கு உதவி செய்து பிரச்சனையில் மாட்டிக்கொள்ளும், ராசிக்காரர்களே..!

தனுசு ராசி:

ராசி மண்டலத்தில் தனுசு 9வது ராசியாகும். இந்த ராசியின் அதிபதியாக நவக்கிரகங்களில் சுபக்கிரகமாக கருதப்படும் குருபகவான் ஆட்சி செய்கிறார். மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதங்களில் பிறந்தவர்கள் தனுசு ராசியில் பிறந்தவர்கள் ஆவர்.

இந்த ராசி குருவுக்கு சொந்த வீடாக இருப்பதால் இந்த ராசியில் குருபகவான் ஆட்சியாகவும், மற்ற கிரகங்கள் சமமாகவும் நட்பாகவும் விளங்குகின்றன. இந்த ராசியில் மட்டுமே எந்தக் கிரகமும் நீசம் அடையாமலும் பகையும் பெறாமலும் நட்பாகவும் சமமாகவும் விளங்குகின்றன.

நட்பு ராசிகள் :

தனுசு ராசிக்காரர்களுக்கு மேஷம், சிம்மம், கும்பம், துலாம் ஆகியவை நட்பு ராசிகள் ஆகும். ரிஷபம், கன்னி, கடகம், மீனம் ஆகியவை பகை ராசிகளாகும்.

குணங்கள் :

தனுசு ராசிக்காரர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் விளங்குவார்கள். மேலும் தோல்வி என்பதை தம் வாழ்நாளில் அடையக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். எப்பொழுதும் ஒரு லட்சியத்தை நோக்கமாக வைத்துக் கொண்டு அந்த லட்சியத்தை அடைய எந்த ஒரு தடைகளையும் தாண்டி வெற்றி பெறப் பாடுபடுவார்கள். நல்ல தன்னம்பிக்கையையும் முயற்சியையும் எப்பொழுதும் மேற்கொள்வர். எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் உடையவர்கள்.

அடிக்கடி சுற்றுப்பயணம் செல்ல விரும்புவார்கள். வெளியூர் பயணங்கள் செய்வதில் ஆர்வம் மிக்கவர்கள். வீட்டில் வளர்ப்புப் பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வம் உடையவர்கள். தனுசு ராசிக்காரர்கள் பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்தவர்கள் என்றாலும் தற்பெருமை அதிகம் உடையவர்கள். எதிர்காலத்தில் நடக்கப் போவதை கூட முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும். இவர்களுக்கு பொய் பேசுபவர்களையும், தீய பழக்க வழக்கம் உள்ளவர்களையும் கண்டால் பிடிக்காது. யாருக்கும் கீழ் படிந்து அடிமையாக நடப்பதென்பது இவர்களுக்கு இயலாத காரியமாகும்.

இவர்களிடம் அன்பாக பழகினால் எதையும் சாதித்து கொள்ளலாம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்புடையவர்களாதலால் அடிக்கடி ஏதாவது பிரச்சனையில் மாட்டிக் கொள்வார்கள். தங்களுடைய வாழ்க்கையில் வசதிக்கு தக்கவாறு எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வார்கள். தனுசு ராசிக்காரர்கள் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அதை ஈடுபாட்டுடன் செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பார்கள். ஓய்வு நேரத்தை கூட வீணடிக்காமல் ஏதாவது ஒரு துறையில் சாதித்து விட வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்கள். சிலருக்கு வர்ணம் தீட்டுதல், சிலை வடித்தல், சித்திரம் வரைதல் போன்றவற்றினாலும் லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை :

எண் – 10,11,12

கிழமை – வியாழன், திங்கள்

திசை – வடகிழக்கு

நிறம் – மஞ்சள், பச்சை

கல் – புஷ்ப ராகம்.