விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த போட்டியில் பல பேர் கலந்து கொண்டாலும் சில பேர் மக்கள் மத்தியில் நன்கு பதிந்து விடுவார்கள். அந்த வகையில் கவின் அனைவரிடத்திலும் பரிட்சையமானவர். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இதுற்கும் போது பல சர்ச்சைகளில் சிக்கியவர்.
பிக் பாஸ் 3யில் கலந்து கொண்டவர்களில் மிகவும் முக்கியமான நபராக வலம்வந்தவர் கவின். பின்னர், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர், குடும்ப சிக்கல்களை சமாளித்து தற்போது தான் நிம்மதியாக இருக்கிறார் என்று தெரிகிறது.
இதை தொடர்ந்து, போட்டியாளர்கள் பலரும் நிறைய நிகழ்ச்சிகளுக்கு செல்வதும், பேட்டி அளிப்பதும் என்று கடும் பிஸியாக இருக்கிறார்கள். அந்த வகையில் கவினும் பல பேட்டிகள் அளித்து வருகிறார்.
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில், டேட்டிங் யாருடன் செல்ல விரும்புகிறீர்கள் என்று கவினிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் இயக்குனர் செல்வராகவனை டேட் செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். அவரை பற்றி கற்றுக் கொள்ள நிறைய விரும்புவதால் அவரை டேட் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.