மேற்கு வங்க மாநிலத்தில் இளம்பெண்ணின் புகைப்படத்தை அவரது காதலர் ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள தாண்டலா காவல் நிலையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், இளைஞர் ஒருவருடன் நட்பு ரீதியாக பழகியுள்ளார்.
அந்த சமயத்தில் இருவரும் சேர்ந்து பல போட்டோக்கள் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நட்பில் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர்.
இதனால், இளம்பெண் மீது ஏற்பட்ட ஆத்திரம் காரணமாக ஆண் நண்பர் அப்பெண்ணோடு எடுக்கப்பட்ட போட்டோக்களை மார்பிங் செய்து ஆபாசமாக பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த அப்பெண் அவமானத்தால் கூனி குறுகி தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைப்பற்றி அவரின் தந்தை கொடுத்த புகாரில், அந்த ஆண் நண்பர் ஒரு போலியான அக்கௌன்ட்டை திறந்து அதில் இந்த போட்டோக்களை வெளியிட்டதாக கூறினார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை தேடி வருகிறார்கள்.