காலையில் கண் விழித்ததும் காபியோ தேநீரோ அருந்துவது பலரது வழக்கம்.
காலையில் தூங்கி எழுந்ததும் காபி, டீ குடிப்பது தூக்கத்தை கலைப்பதற்காக என கருதப்பட்டாலும், டீ, காபி குடிப்பதனால் பல கூடுதலான பயன்கள் இருப்பதாக இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும், காபி, டீ குடிப்பது உடல் எடையை குறைத்து, நீரிழிவை கட்டுப்படுத்துவது, உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு நன்மைகளை இது நமக்கு செய்வதாக இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீ அல்லது காபி குடிக்கும் முன் ஒரு டம்ளர் நீரைக் குடிப்பது நல்லது ஏனனெனில் தண்ணீர் வயிற்றில் உள்ள அமிலங்களின் வீரியத்தைக் குறைகிறது.
காபி, டீ குடிப்பதற்கு முன் தண்ணீர் குடிப்பதால், அவற்றில் உள்ள அதிகப்படியான அமிலத்தால் பற்கள் பாதிக்கப்படுவது குறையும்.
காபி அல்லது டீ குடிக்கும் முன் நீரைக் குடிப்பதால், உடல் நீர்ச்சத்தைப் பெறுவதோடு, டாக்ஸின்களும் வெளியேற்றப்படுகிறது.