சற்றுமுன் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி வெளியானது!

2019ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்  எதிர்வரும் சனிக்கிழமை பரீட்சை பெறுபேறுகள் வெளியிடக்கூடியதாக இருக்கும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் முதல் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.நாடு பூராகவுமுள்ள 82 நிலையங்களில் இந்நடவடிக்கை இடம்பெறவுள்ளது. மதிப்பீட்டு பணிகளில் 28 ஆயிரம் பேர் ஈடுபடவுள்ளனர். விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 16ம் திகதி ஆரம்பமாகி 26ம் திகதி நிறைவடையவுள்ளது.

இதில் எட்டாயிரம் பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் தெரிவித்துள்ளார்.