உங்கள் பெயரின் முதல் எழுத்து A என்ற எழுத்தில் தொடங்குதா…!!

நியூமராலஜிப்படி எழுத்துக்கள் மற்றும் எண்களுக்கு இடையேயான கூட்டாய்வை பகுப்பதன் மூலம் உங்கள் குணநலன்கள், தனித்திறன்கள், குறிக்கோள்கள் எண்ணங்கள், உங்கள் இயல்பான திறமைகள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்.அதுமட்டுமின்றி உங்கள் முக்கிய பண்புகள் மற்றும் பிற நபர்களுடன் நீங்கள் தொடர்பு கொள்ளும் விதம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்த முடியும் என எனப்படும்.

நியூமராலஜிப்படி“ A ” என்ற எழுத்தில் பிறந்தவர்களின் குணநலங்கள் பற்றி பார்ப்போம்.நேர்மையானவர்கள்இவர்கள் நேர்மையானவர்களாக இருப்பார்கள். வாழ்வில் ஏதேனும் ஒரு லட்சியம் கொண்டிருப்பார்கள்

எங்கும் எப்பொழுதும் தங்களை முன்னிலைப்படுத்தி கொள்ள முயல்வார்கள். இவர்கள் தங்கள் குறிக்கோளில் கவனம் செலுத்துவார்கள்.இந்த நபர்கள் இலக்கை நோக்கி இயக்கப்படுகிறார்கள், மேலும் அவர்களின் இலக்குகளை அடைய எதுவும் செய்ய தயங்க மாட்டார்கள்.

ஒரு குழுவுடன் இருக்கும்போது இவர்கள் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவார்கள் அதனால் இவர்கள் இயற்கையிலேயே தலைவராக பொறுப்பேற்கும் தகுதி பெற்றவர்களாக இருப்பார்கள். எனவே பலர் உங்களை பின் தொடர விரும்புவார்கள்.கல்வியில் தலைசிறந்தவர்

கல்வியில் தலைசிறந்தவராக இருப்பார்கள். பல திறமைகள் இவர்களிடம் நிச்சயம் ஒளிந்து கொண்டிருக்கும். சமூக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.மக்களிடம் ஏதேனும் ஒரு வகையில் நெருங்கிய தொடர்பு இவர்களிடம் இருக்கும்.வாழ்க்கையில் ஒரு நோக்கம் கொண்ட இவர்கள் நடைமுறைக்கு தகுந்தார்போல் தங்களை மாற்றிக் கொள்வார்கள்.

உணர்ச்சிவசப்பட கூடியவர்கள்

உணர்ச்சிவசப்பட கூடியவர்களாக இவர்கள் இருக்கமாட்டார்கள். தங்களின் வார்த்தைகளில் ஒரு தெளிவு இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள்.மற்றவர்களிடம் தங்கள் வார்த்தைகளின் உணர்ச்சி ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்.இந்த எழுத்தை கொண்டவர்கள் ரொமான்ஸில் பின்தங்கியவர்களாகவே இருப்பார்கள்.அதிகமாக ஊர் சுற்றுபவர்களாக இருப்பார்கள். இயற்கை மீது ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

புத்திசாலித்தனம் கொண்டவர்கள்

அருவருக்கத்தக்க செய்கைகளால் விரைவில் எரிச்சல் அடைவார்கள். இந்த நபர்கள் அதிக புத்திசாலித்தனம் கொண்டவர்களிடம் வெகுவிரைவில் ஈர்க்கப்படுவார்கள்.இவர்கள் யாருடைய தயவையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தன் சொந்தக் காலில் நிற்பதை குறிக்கோளாக கொண்டிருப்பார்கள்.