பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் பொன்னம்பலம். இந்நிகழ்ச்சியின் அவரின் செய்கைகள், நடவடிக்கைகள் ரசிகர்களை மிகவும் ஈர்த்தன.
அடிக்கடி அவர் ஜெய் ஸ்ரீ ராம் என உச்சரித்ததை மறக்க முடியாது. சினிமாவில் ரஜினி உட்பட பல நடிகர்களுக்கு வில்லனாக நடித்திருந்தார். அதிமுகவில் இருந்த அவர் 2017 க்கு பின் பாஜக வில் இணைந்தார். இன்று தஞ்சையில் மறைந்த பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மத்திய அரசு எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும், வயதிலும், அறிவிலும், ஆற்றலிலும் உலகமே போற்றுக்கூடிய தலைவர் பிரதமர் மோடி நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறார். அவர் சொல்வது நூற்றுக்கு நூறு சரியாக இருக்கிறது. அவர் சொல்வது தான் நடக்க வேண்டும். அப்படி நடந்தால் தான் இந்திய குடிமக்கள் பாதுகாப்பாகவும் வெளிநாடு தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பாகவும் இருக்க முடியும் என கூறியுள்ளார்.
பாஜகவுக்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அவர் இப்படியான கருத்தை கூறியிருப்பது எதிர்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.