நடிகை ஹன்சிகா – சிம்புவுடன் பிரேக்கப் ஆன காதலை மீண்டும் புதுப்பிக்க யோசனை செய்து வருகிறாராம். சினிமாவில் கவனம் செலுத்த வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் சிம்புவின் காதலை பிரேக்கப் செய்து கொண்டார் நடிகை ஹன்சிகா. ஆனால் அவர் நினைத்தது போல நல்ல படங்கள் எதுவும் அமையவில்லை.
முன்னணி நடிகையாக இருந்த ஹன்சிகா சிம்புவுடன் ஏற்பட்ட பிரிவுக்கு பிறகு மிகவும் பின்னடைவுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் மீண்டும் சிம்புவுடன் அவரது காதலை புதுப்பிக்க ஹன்சிகா யோசித்து வருவதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டது.
ஹன்சிகாவுக்கு வாய்ப்பு கொடுத்த பிரபுதேவாவும் தற்போது அவரை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இதனால் ஹன்சிகா நடித்த படங்களும் பெரிய அளவில் பேசப்படவில்லை. முன்னணி நடிகையாக இருந்த அந்த அந்தஸ்த்தும் கொஞ்சம் கொஞ்சமாக சென்று கொண்டிருக்கிறது.
பொதுவாக நடிகைகள் என்றால் படங்கள் ஓடவில்லை என்றால் அடுத்த கட்டமாக டோலிவுட், பாலிவுட் என படையெடுத்து செல்வார்கள். ஆனால் ஹன்சிகாவோ இங்கயே சாதித்துக் காட்டுவேன் என்று அடம்பிடித்து வருகிறாராம்.
இதை தொடர்ந்து, நயன்தாராவை போல லீடு ரோலில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் ஹன்சிகா நடித்த படம்தான் ‘மகா’ ஆனால் இந்த படம் எடுக்காமல் கிடப்பில் கிடக்கிறது. இந்த நிலையில் சிம்புவை கெஸ்ட் ரோலில் போட்டு அவரது படத்தை விளம்பரம் செய்ய வேண்டும் என்று ஹன்சிகா போட்டோ ஐடியா வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.
இதனால் அவர்களுக்குள் இருந்த பழைய காதலை புதுப்பிக்கும் முயற்சியில் ஹன்சிகா ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. ஏற்கனவே சிம்புவின் வீட்டில் நடந்த பெண்பார்க்கும் நிகழ்ச்சிகள் தோல்வியை தழுவியது. இதனால் மீண்டும் இவர்களது பழைய காதல் துளிர்க்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. இன்னும் சிலர் விக்னேஷ் சிவன் நயன்தாரா பெற்ற சிம்பு இவ்வாறு செய்ததாக கருதப்படுகிறது என்று தெரிவித்து வருகிறார்கள்.