பாப் உலக மன்னன் மைக்கேல் ஜாக்சன் போலவே அச்சு அசலாக இருக்கும் நபரை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர் மைக்கேல் ஜாக்சன் தான் என டி.என்.ஏ பரிசோதனையும் செய்ய சொல்லி வலியுறுத்தி வருகின்றனர்.
பாப் உலக மன்னன் மைக்கேல் ஜாக்சன். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் இறந்தார்.
இந்த நிலையில் அர்ஜென்டினாவின் பார்சிலோனாவில் பிறந்தவரும், தற்போது பாப் உலகில் வளர்ந்து வரும் கலைஞரான செர்ஜியோ கோர்டெஸ், மறைந்த மைக்கேல் ஜாக்சனின் உருவத்துடன் அச்சு அசலாக காணப்படுகிறார்.
இவரும் உலகம் முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மைக்கேல் ஜாக்சனின் பாடல்களுக்கு நடனம் ஆடி வருகிறார். மைக்கேல் ஜாக்சனின் தோற்றத்துடன் இருக்கும் செர்ஜியோ கோர்டெஸ் தற்போது புகழ்பெற்று வருகிறார்.
சமீபத்தில் செர்ஜியோ கோர்டெஸ் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதில் அவர், அனைத்து மைக்கேல் ஜாக்சன் ரசிகர்களுக்கும் வணக்கம். நான் உங்களை நேசிக்கிறேன். எனது இசை நிகழ்ச்சியை பாருங்கள் என்று கூறி இருந்தார்.
இந்த வீடியோவை பார்த்து வியந்த மைக்கேல் ஜாக்சன் ரசிகர்கள், செர்ஜியோ கோர்டெஸ் தான், உண்மையான மைக்கேல் ஜாக்சன் என்றும், அவர் மறைந்து வாழ்வதற்காக தான் இறந்துவிட்டதாக நாடகம் ஆடுகிறார் எனவும் கூறி வருகின்றனர். அவருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதுபற்றி அவர் கூறியதாவது, என்னை பார்த்த ஒரு பத்திரிகையாளர், நான் மைக்கேல் ஜாக்சன் தோற்றத்தில் இருப்பதாக கூறினார். என்னை மைக்கேல் ஜாக்சன் போன்று மேக்கப்அப் போட்டு அவரது பத்திரிக்கையில் வெளியிட விரும்பினார்.
நான் அதை வேடிக்கையாக செய்தேன். பின்னர் அவர் என்னை சில சுவிஸ் தயாரிப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள் எனது புகைப்படத்தை வாசனை திரவிய விற்பனைக்கு பயன்படுத்த விரும்பினர். இது எல்லாம் எனது அன்றாட வாழ்க்கையில் தற்செயலாக நடந்தது என்றார்.
Thailand 23 Dem. ?❤ pic.twitter.com/uTNSzmfCjH
— Sergio Cortés (@SergioCort) October 30, 2019