மாணவர்களுக்கு புரியும் வகையில், உடற்கூறியல் வகுப்பில், தன் உடலை காட்டி, உடல் முழுவதும் உடல் பாகங்கள் கொண்ட உடையணிந்து பாடம் எடுத்துள்ளது பாராட்டுகளை பெற்று வருகிறார்.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த வெரோனிகா ட்யூக் என்ற ஆசிரியை ஒருவர் மாணவர்கள் எளிதாக பாடம் கற்றுக்கொள்ள உடலில் உள்ள உறுப்புகள் வெளியில் தெரிவது போன்ற ஒரு முழு உடல் போன்ற ஆடையை அணிந்து பாடம் சொல்லிக்கொடுத்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சுமார் 15 வருடங்களுக்கு மேலாக ஆசிரியராக பணியாற்றி வரும் வெரோனிகா மாணவர்களுக்கு புரியும் வகையில், ஒரு தனித்துவமான யோசனையை கண்டுபிடித்து, உடற்கூறியல் வகுப்பில் உடல் பாகங்கள் கொண்ட உடையணிந்து வகுப்பு எடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்தை அவரது கணவர் அதைப்புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இது போன்று புரியும் வகையில் பாடம் எடுப்பதால் மாணச்வர்கள் எளிதில் மறக்கமாட்டார்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.