தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள காளவாசல் பகுதியை சார்ந்த 16 வயதுடைய சிறுமி., நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமி இணையதளத்தை உபயோகம் செய்து வரும் நிலையில்., இவருக்கு இன்ஸ்டாகிராம் கணக்கு உள்ளது.
இந்த கணக்கு மூலமாக இணையத்தில் அதிக நேரம் செலவு செய்து வந்த நிலையில்., கடந்த வருடத்தில் இன்ஸ்டாகிராம் மூலமாக மதுரை மாவட்டத்தில் உள்ள தெப்பக்குளம் புது காலனி பகுதியை சார்ந்த சாகுல் ஹமீது என்பவரின் மகனான அல் அசன் (வயது 20) அறிமுகம் கிடைத்துள்ளது.
இவர்கள் இருவரும் துவக்கத்தில் நட்பு ரீதியாக பழகி வந்த நிலையில்., இவர்களுக்குள் இருந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில்., காதலனின் கவர்ச்சி பேச்சிற்கு மாணவி மயங்கியுள்ளார்.
காதலனின் பேச்சை கேட்ட மாணவி தனது அந்தரங்க புகைப்படங்களை காதலனுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகிறது. இந்த விஷயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த கொடூரன் மாணவியை தனது ஆசைக்கு இணங்குமாறு கூறியுள்ளான்.
மேலும்., முதலில் அமைதியாக கூறி வந்த காம கொடூரன்., தனது வசம் இருக்கும் மாணவியின் அந்தரங்க புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளான்.
இதனால் பயந்து போன சிறுமி செய்வதறியாது திகைக்கவே., நாமக்கல்லுக்கே சென்று சிறுமியை அங்குள்ள விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மேலும்., இதே கொடூரத்தை மிரட்டி பலமுறை பாலியல் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளான்.
இவனின் தொடர் மிரட்டலால் கடுமையான மன வருத்தத்திற்கு உள்ளான சிறுமி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அல் அசனை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்., பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை மீண்டும் இதனைப்போன்ற சம்பவம் உறுதி செய்கிறது.