கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை. நடிக்க வந்த சில வருடங்களிலேயே ரஜினி, விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினியுடன் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே, இப்படத்தில் இவர் ரஜினிக்கு தங்கச்சியாக நடிக்கின்றாராம்.
ரஜினிக்கு பொண்ணு வயது இருக்கும், இவர் தங்கச்சியா என்று சமூக வலைத்தளங்களில் தற்போது செம்ம கிண்டல் செய்து வருகின்றனர்.
ஆனால், இது உண்மையா என்று தெரியவில்லை, இந்த தகவல் வந்ததில் இருந்து நிறைய ட்ரோல் வர ஆரம்பித்துவிட்டது.