நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகையின் கணவர் திடீர் தற்கொலை!

நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துவரும் சின்னத்திரை நடிகையான ரேகாவின் கணவர் தீடீர் என்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும், துணை நடிகையாகவும் இருந்து வருகிறார் நடிகை ரேகா. கோபிநாத் என்பவரை காதலித்து திருமனம் செய்துகொண்ட ரேகாவிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

 

கோபிநாத் ஒரு தனியார் விளம்பர நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கோபிநாத்திற்கு தான் வேலை செய்யும் இடத்தில ஒரு பெண்ணுடன் தவறான உறவு இருந்ததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதற்கும் மேல் கடன் பிரச்னை இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மனைவி ரேகாவுடன் ஏற்பட்ட தகராறினால் மன உளைச்சலுக்கு ஆளாகி அலுவலகத்திற்கு சென்ற கோபிநாத் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இந்த தற்கொலைக்கு பின் வேறு எதாவது காரணங்கள் இருக்கிறதா என்று மேலும் விசாரணையில் காவல் துறையினர் இறங்கியுள்ளனர்.